வாடிப்பட்டி குலசேகரன் கோட்டையில் ஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு நடைபெற்றது.
மதுரை மாவட்டம்வாடிப்பட்டி ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை அருகே உள்ள நவ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் உள்ளஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு நடைபெற்றது . காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 9 ஆஞ்சநேயர்கள் சிறிய அளவிலான சிலைகள் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.இக்கோவிலில் பாலாஜி பட்டர் அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் செய்தார்.