புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மகாவீரர் சிற்பத்திற்கு வெள்ளாள வயல் கிராமத்தார்கள் மற்றும் அருகாமை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு கூட்டு வழிபாடு செய்துள்ளனர், அப்போது கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த சிற்பத்திற்கு வழிபாடு செய்தவர் அருள் வந்து கிராம மக்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். இந்த இடத்தை சுத்தம் செய்து தொடர்ந்து வழிபாடு செய்வதற்கும்,
சிறிய அளவில் கோயில் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
