• Wed. Apr 23rd, 2025

100 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..,

ByKalamegam Viswanathan

Apr 9, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்திருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும், நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிசேதம் அடைந்த தில் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இது குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.