திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ளது திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். 2 சித்தர்கள் வழிபாடு செய்த கோவில் இது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் 5 நிறம் மாறும் தன்மை கொண்ட சிறப்பு பெற்றது. சிவராத்திரி தினத்தில் முழு பக்தியுடன் வழிபட்டால் ஸ்ரீபஞ்சவர்ண ஸ்வாமி 5 நிறங்களும் மாறுவதை பக்தர்கள் கண்கூடாக கண்டு செல்வதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த தலத்திற்கு நேரில் வந்து வழிபாடு செய்தால் திருமண பாக்கியம், நோய் தீர்க்கும் வல்லமை படைத்த ஸ்ரீபஞ்சவர்ண சுவாமி விஷக்கடிகளுக்கு விபூதி மூலம் வியாதியை சரி செய்யும் சுவாமியாக திகழ்ந்துவரும் திருக்கோயில். இந்த கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சவர்ண சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்த அபிஷேக ஆராதனை விழாவில் திருவள்ளூர் ஈக்காடு புள்ளரம்பாக்கம் ஒதிக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமியை வழிபட்டு ஓம் சிவாய நாமம் எழுதி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.
ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச மாலை அபிஷேகம்..!







; ?>)
; ?>)
; ?>)