• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…

Byadmin

Aug 6, 2021

அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார்.

அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார் .சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இவர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3. 45 மணிக்கு காலமானார். கடந்த 1992 ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். அதிமுக தொடக்க நாள் முதல் கட்சிக்காக உழைத்தவர் மதுசூதனன். அவரது மறைவை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் அத்தனை நிர்வாகிகளும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர் .முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் அவர்கள் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தி, மதுசூதனன் குடும்பத்தினருக்கும் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆறுதல் கூறினார் என்பது அரசியல் நாகரிகமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும் தொடர்ந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகவும் ,சகோதரியாகவும் விளங்கிய திருமதி .சசிகலா அவர்கள் நேரில் வந்திருந்து மதுசூதனன் உடலுக்கு மாலை மரியாதை செய்து , இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

பல்வேறு அரசியல் விரோத நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தாலும், ஒரு முக்கிய பிரமுகரின் மறைவிற்கு கட்சி மாச்சரியம் பார்க்காமல், அனைத்து பிரிவினரும் வந்திருந்து மரியாதை செலுத்துவது தமிழக நாகரிகம் என்பதை மீண்டும் ஒரு முறை மதுசூதனன் மறைவின் மூலமாக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். செய்தார்க்கு செய்யவேண்டும், இறந்தோருக்கு அழுக வேண்டும் என்ற நியதி இங்கு பதிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.