• Fri. Mar 29th, 2024

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு கோவை கல்லூரி மாணவர்கள் தேர்வு!…

Byadmin

Aug 6, 2021

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் (Asteroid Search Campaign ) ஆய்விற்கு கோவை எஸ்.என்.எம்.வி.கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION – IASC) புதிய விண்கற்களை கண்டறியும் (Asteroid Search Campaign) ஆய்வினை நடத்தி வருகிறது.

இவ்வாய்வில் பல்வேறு நாடுகளை சார்ந்த விண்வெளி ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பங்கேற்று புதிய விண்கற்களை கண்டறிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆய்விற்கு இந்தியாவில் இருந்து 20 ஆய்வு குழுக்கள் தேர்வாகி உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து எஸ்.என்.எம்.வி கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் G.கிருத்திகா கிருஷ்ணன், R.மோனிஷ் குமார், P.அபிநயா, T.காயத்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவை Open Space Foundation-னின் தலைவர் திரு.சுரேந்தர் பொன்னழகர் ஒருங்கிணைக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து இவ்வாண்டில் தேர்வு செய்யப்பட ஒரே ஆய்வுக்குழு என்ற பெருமையை எஸ்.என்.எம்.வி .கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பெறுகிறது.

இத்திட்டம் அமெரிக்க நாட்டின் Institute for Astronomy- Hawaii ல் உள்ள பான்-ஸ்டார்ஸ்-01 (Pan-STARRS) என்ற தொலைநோக்கியின் மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்துவருகிறது.

இவ்விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு CITIZEN SCIENTIST RESEARCH திட்டத்தின் கீழ்
செயல்படுத்தப்படுகிறது .

இப்படி எடுக்கப்படும் படங்களை கொண்டு ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களை கண்டறிவது இவ்வாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *