• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் விவகாரம் மேலும் ஒருவர் கைது…

Byadmin

Jul 26, 2021

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்பாட்ட போராட்டத்தில் சர்சைக்குரிய வகையில் பாரதமாதா , இந்துமதம் , மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ்பொன்னையா வை கைது செய்ய கேட்டு தமிழம் முழுக்க புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து அவர்மீது சட்டவிரோதமாக கூடுதல் , இரண்டு ஜாதி , இரட்டுதரப்பு, இரண்டு மதம் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் வகுத்துதல் ,மதநம்பிகளை அவதூறுபரப்புதல்,என 7 பிரிகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் இன்று அந்த போராட்ட ஒருங்கிணைப்பாளரும் முதல் குற்றவாளியுமான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது தனிபடை போலீசாரால் காரோடு பகுதியில் வைத்து கைது செய்யபட்டு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளதால் அவன் மீது குண்டர் சட்டம் போட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.