• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

ByI.Sekar

Mar 5, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மரிக்குண்டு ஊராட்சி எம். சுப்புலாபுரத்தில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிழல் குடை அமைக்க இன்று பூமி பூஜை நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் வரதராஜன், ஆணையாளர்கள் ஐயப்பன், திருப்பதி வாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து தெப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூபாய் 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ,அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி வடிவேல், பவானி பெருமாள், முருகன் மற்றும் மரிக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்லமணி மகாலிங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் மரிக்குண்டு செல்வம், வெங்கட்ராமானுஜம், அதிமுக நிர்வாகி கவிராஜன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.