• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அற்புத சக்தி படைத்த பாதாம்பருப்பு:

Byவிஷா

Aug 3, 2022

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம்.
இதில் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவியாக இருக்கின்றது. இதனை தினமும் எடுத்து கொண்டால் பல நன்மைகளை வாரி வழங்குகின்றது. அந்தவகையில் பாதமை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் கிடைக்கின்றன.
பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும். பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
பாதாம் பருப்பை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.
பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது. பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.