


ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன்ஸ் பாதிரியார் உபா சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணம் அடைந்தார் அவரது அஸ்தி திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது அஞ்சலி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார் பின்னர் செய்தியாளர்களை அவர் கூறும்போது ஸ்டெயின்ஸ் பாதிரியார் கைது செய்யப்பட்ட போது அவருடன் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் அதேபோல் ஜார்க்கண்ட் உத்தர்காண்ட் மாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர்கள் 6 ஆயிரம் பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உபா சட்டத்தின்கீழ் நீதி உள்ள மக்கள் உழைக்கும் மக்கள் நீதிக்காக போராடும் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள் எனவே இந்த உபா சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் அதேபோல் தேசிய பாதுகாப்பு சட்டம் சிஐஏ உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தாமஸ் பால்சாமி கேட்டுக்கொண்டார் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் தாமஸ் பால்சாமி எச்சரித்தார்.

