பாஜகவின் அடியாள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் முன்வரவேண்டும் என்று கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதை உயிர்துடிப்பான அரசியலின் அங்கம் என்ற புரிதலோடு எதிர்கொண்டது. ஆனால் தமிழக பாஜக உங்கள் வியாபாரத்தில் கைவைப்போம் என்று வெளிப்படையாக மிரட்டுகிறது. இந்த அடியாள் அரசியலுக்கு தமிழர்களாகிய நமது கடமை என்று கரூர் தொகுதி எம்.பி. தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
