மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட வேண்டும் என்று வீர இந்து சேவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
மதுரை நடராஜ் தியேட்டர் அருகில் வீர இந்து சேவா அமைப்பினர் மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் பெயரை சூட்டுமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்தக் கூட்டத்தில் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்…
வீர இந்து சேவா மாநில பொதுச்செயலாளர் காவி முத்துராஜ்
கூறுகையில் மத்திய அரசின் அழகியல் மாநகராம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு கட்டப்பட்டு வரும் மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்று அன்னையின் திருப்பெயர் சூட்டப்பட வேண்டும் என்று வீர இந்து சேவா இயக்கம் சார்பாக மத்திய மாநில அரசுகளுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்….
இந்த கோரிக்கையை அரசு உடனே நடத்தித் தர வில்லை என்றால் அடுத்த மாதம் உண்ணாவிரதம் நடத்தப்படும்….