மதுரையில் வண்ணார் சமூக மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டார்கொட்டாரம், அவனியாபுரம், வாடிப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணார் சமூகத்தினர் அதிகளவில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள தங்களது சமூகத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும், பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் அரசு தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனை வலியுறுத்தும் விதமாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு வண்ணார் பேரவையின் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் நேரில் வந்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.