நெட்டூர் தேரி கிராமத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டுர் தேரி கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் இடத்தை அளந்து கொடுக்க கோரி குடியேறும் போராட்டம்.தாலுகா தலைவர் அழகுசுந்தரி தலைமையில் இன்று நடைபெற்றது.இப்போராட்டத்தில் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் முத்துபாண்டியன் கண்டன உரையாற்றினார் .மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா மாவட்ட தலைவர் ஆயிஷா தாலுகா செயலாளர் மல்லிகா மற்றும் இடைகமிட்டி நிர்வாகிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இப்போராட்டத்திற்கு வட்டாட்சியர் பட்டமுத்து அவர்கள் நேரில் வந்து வீட்டு மனை பட்டா கொடுத்த அனைவருக்கும் இடத்தை அளந்து கொடுக்குமாறு வாக்குறுதி கொடுத்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவடைந்தது .கிளை செயலாளர் லெட்சுமி நன்றி தெரிவித்து போராட்டத்தை முடித்து வைத்தார்.