
ராமநாதபுரம் புத்தேந்தல் கிராமத்தில் விதிமுறையை மீறி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் செஞ்சோலை மனநலக்காப்பகத்தை இழுத்து மூட கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
செஞ்சோலை மனநலக்காப்பகத்தில் மனநலம் குன்றிய 86-நபர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பெற்ற வாக்காளர் அடையாள அட்டையை நீக்ககோரியும்
முகவை பெரியார் பேரவை எனும் பெயரில் உள்ள முகநூல் கணக்கில் மத உணர்வை தூண்டும் வகையில் பதிவு செய்யும் செஞ்சோலை நிர்வாகியை கைது செய்யவும் முகவை பெரியார் பேரவை அமைப்பை தடை செய்யவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் மன நோயாளிகளிடம் மரம் வெட்டுதல், மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களில் மனிதக்கழிவு நீரை பாய்ச்சி விவசாயிகளுக்கு தொந்தரவு அளித்தல் போன்ற செயல்கள் அரங்கேறி வருவதால், காப்பகத்தில் உள்ள மன நோயாளிகளை ஏர்வாடி அரசு காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வாக்காளர் அடையாள அட்டை பெற்ற 86 பேரும் உயிருடன் உள்ளனரா? என காவல்துறை மூலம் விசாரணை செய்ய வேண்டும் முறைகேடாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியியரிடம் மனு கொடுத்தனர்..
