
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. நேர்கொண்டப் பார்வை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் – அஜித் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்திற்காக இணைந்துள்ளது. அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைப்படி அஜித் இன்டர்போல் அதிகாரியாக வருகிறாராம்.
படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது. கடந்த வாரம் படத்திலிருந்து முதல் சிங்கிளாக ‘நாங்க வேற மாதிரி’ எனும் பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடலெழுத யுவனும் அனுராக் குல்கர்னியும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
இந்த பாடல் தற்போது வரை யூ-டியூப்பில் 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்த பாடல் உருவான சுவாரஸ்ய தகவல் குறித்து கேள்விக்கு யுவன் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. “படம் தொடங்கும் காலக்கட்டத்திலேயே அஜித் சாருக்கு மாஸான இன்ட்ரோ பாடல் வேண்டும் என்று வினோத் கூறியிருந்தார். ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் விதத்தில் பாடல் வர வேண்டுமென்று விரும்பினேன். அப்படியே இந்தப் பாடலும் உருவானது” என தெரிவித்துள்ளார்.