
அன்பு வாசகர்களே வணக்கம்
வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அரசியல் டுடே எனும் செய்தி இணையதள வாயிலாக தங்களை சந்திக்கிறது. தடுக்கி விழுந்தால் பத்திரிகை ஆரம்பிக்கும் இந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் பத்திரிகை ஆரம்பிக்கலாம் வாசகர்கள் ஆகிய தங்களை எந்த வகையிலும் சலிக்காத வகையில், யார் சார்பில்லாம் உங்களின் கையில் தினமும் புது, வித்தியாசமான செய்திகளுடனுடன் தவழ போகிறது. அதுமட்டுமல்ல மேலே சொன்னது போல அரசியல் செய்திகளில் அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்களையும் அவர்களின் போலி முகத்திரையும் கிழிக்க ஒரு போதும் இந்த அரசியல் டுடே இணையதளம் தயங்காது. ஒவ்வொரு செய்திகளின் மூலம் புது வெளிச்சம் பாய்ச்ச வாசகர்கள் ஆகிய உங்களின் ஆதரவை நீங்கள் எப்போதும் அளித்து கொண்டே இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த அரசியல் டுடே இணையதளத்தை முதற்கட்டமாக அரசியல் தலைவர்களின் பார்வைக்கு எடுத்து சென்றிருக்கிறது அரசியல் டுடே செய்தி குழு. அந்த வகையில் முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தை நமது ‘அரசியல் டுடே ‘ செய்தி இணைய தளத்தின் ஆசிரியரும் ,செய்தி குழுவினரும் சந்தித்து அரசியல் நிலவரங்களை பேசியதோடு வாழ்த்துகளையும் பெற்றனர்.
