கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று பிடிபட்டது. டீ கடை ஒன்றின் மேல் பகுதியிலிருந்து பிடிபட்ட இந்த மர நாய் மீண்டும் காட்டில் விடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை எதிரே அமைந்த ஓட்டலின் மாடியில் வித்தியாசமான காட்டு விலங்கு நடமாட்டம் இருந்தது தெரியவந்ததையடுத்து கடை உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து நாகர்கோவில் வன அலுவலகத்தில் இருந்து வன ஊழியர்கள் அந்த கடைக்கு வந்து மாடியில் ஏறி சோதனை நடத்தியபோது அங்கு அரிய வகை பழ உண்ணி எனப்படும் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. எத்தனை லாவகமாக சாக்கு பை மூலம் ஊழியர் பிடித்து அதனை பையில் கட்டி வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பின்னர் மீண்டும் அதனை காட்டில் விட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.