வங்கி லாக்கரில் தங்கம் வெள்ளி நகைகள் வைப்பதற்காக சென்ற மூதாட்டி.பஸ்சில் பலே ஆசாமி கைவரிசை. போலீசார் விசாரணை.
கோவை. ஜூலை.15- தன் வீட்டில் நகை படங்கள் வெள்ளி பொருட்கள் இருந்தால் பாதுகாப்பாக இருக்காது என வங்கி லாக்கரில் வைப்பதற்காக மூதாட்டி ஒருவர் பஸ்ஸில் ஏறி வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் பயணம் செய்தார். பின்னால் நின்ற மர்ம ஆசாமி அபேஸ் செய்து தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கோவை அருகே உள்ள நல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கண்ணம்மாள் வயது 61, இவர் தனது தங்கச் செயின் மற்றும் வெள்ளி பொருட்களை வங்கி லாக்கரில் வைக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று இவர் தன்னுடைய 3 பவுன் தங்கச் செயின் வெள்ளி பொருள்கள் மற்றும் மெட்டி மோதிரம் உட்பட பல்வேறு பொருட்களை வங்கி லாக்கரில் வைப்பதற்காக லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அவற்றை அனைத்தையும் கைப்பையில் வைத்துக் கொண்டு காந்திபுரம் ஜிபி சிக்னல் அருகே உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக பஸ்ஸில் புறப்பட்டார். பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கண்ணம்மாள் வைத்திருந்த கைப்பையை ஆசாமி அபேஸ் செய்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூதாட்டியிடம் நகைகளுடன் கைப்பையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.