

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நடைப்பெற்ற வானவியல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா சாதனை மாணவிகளை ஊக்கபடுத்தும் விதமாக சால்வை அணிவித்தும், பாராட்டு விருது வழங்கியும் கெளரவித்தார். மேலும் அடுத்து நடைப்பெற உள்ள 6 கட்ட போட்டிகளிலும் வெற்றிபெற்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி மற்றும் ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.