• Tue. Apr 16th, 2024

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு!…

By

Aug 10, 2021

திமுக ஆட்சி அமைத்தது முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான மோசடி மற்றும் ஊழல் புகார்களை தூசு தட்டி விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய அதிமுகவின் முக்கிய தலைகளை குறிவைத்து திமுக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

2014- 2018ல் சென்னை மாநகராட்சியில் 460,4.02 கோடி ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு எஸ்.பி வேலுமணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவருக்கு வழங்கியதாக அவர் மீது புகார் இருந்துவரும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி வேலுமணியை சென்னை எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள அவரது அறையில் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணி மீதான புகாரில் கேசிபி என்ஜினீயர் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் மற்றும் 17 பேர் மீது வழக்கு புதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி வேலுமணி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சந்திரசேகரன், ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள வேலுமணியின் உறவினர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், கோவையில் 35 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பதற்றமடைந்த அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் கோவையில் உள்ள இல்லம் முன்பு குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *