முன்னால் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கிவைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட குணியமுத்தூர் பகுதிகழகத்தில் அரசு ஊழியர் காலணி, மாரியம்மன் கோவில் வீதி, ரைஸ்மில் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரானா நோயெதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரகரணங்களை,முன்னால் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
குறிப்பாக முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னால் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவைக்கிவைத்தார். மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடினீரை வழங்கினார்.