

தமிழக அரசின் மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்ப தகவல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று காலை கன்னியாகுமரி சின்னமும் டம் மீன் பிடித்துறைமுகம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். துறைமுகப்பகுதியில் படகு அடையும் பகுதிகளை விரிவாக்கி கூடுதல் படகுகள் கட்டும் வசதியை மற்றும் படகுகள் அடையும் பகுதிகளில் உள்ள நடைபாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையயை மீனவர்கள் சங்கம் உறுப்பினர்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதாராதகிருஷ்ணன் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதிகளை பார்வையிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் .சின்னமும் டம் மீன்பிடி துறைமுகம் ரூ.40_கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் முதல்வர் ஆணைப்படி செயல் படுத்தப்படும்.
தமிழக மீனவர்களின் நலன்களுக்கு எதிராக ஒன்றியஅரசின் திட்டமான சாகர் மாலா திட்டத்தை எதிர்ப்போம்.
இயற்கை மாறுதல்களால் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் வசதி விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
