கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு, வராத விசைப்படகுகளுக்கு பால வாடகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மீனவர்களுக்கு ரேடியோ டெலிபோன் வழங்க கோரியும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் இன்று நாகர்கோவிலிருந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் ” தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு வராத விசைப்படகுகளுக்கு பால வாடகை என்ற பெயரில் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12,000ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இதேபோன்று விசைப்படகு உரிமையாளர்கள் ஆன்லைனில் புதுப்பிப்பதற்கு மற்றும் மானிய டீசலுக்கு செல்லும் விசைப்படகுகள் இடம் 18 ஆயிரம் ரூபாய் பால வாடகை கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தி வசூல் செய்யப்படுகிறது. இந்த முறையற்ற வசூல் காரணமாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்துவதோடு , விசைப்படகு மீனவர்கள் அனைவருக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் தற்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் 750 விசைப்படகுகளில் 100 நபர்களின் படகுக்கு மட்டுமே மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது, மேலும் மீனவர்கள் பாதுகாப்புடன் கரை திரும்ப அவர்களுக்கு ஆர்டி. வயர்லெஸ் கருவியும் ரேடியோ டெலிபோன் போன்றவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர், சங்க தலைவர் சேசடிமை பேட்டி.