• Sun. Mar 16th, 2025

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு…

Byadmin

Jul 15, 2021

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு.

கோவை.ஜூலை. 15- கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் துணை மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முரசொலியில் வயது 45, என்பவர் வயர் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரிய பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் முரசொலிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான அதிகாரிகள் அவரது சான்றிதழ்களை சரிபார்த்து போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து துணைமின் நிலைய உதவிப் பொறியாளர் கனிமொழி என்பவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முரசொலி பணியில் சேரும் போதுதான் டிப்ளமோ இன்ஜினியரிங் படுத்துவதாக போலியாக சான்றிதழ் தயாரித்து உள்ளார். பின்னர் அதனை கொடுத்து பணியில் சேர்ந்த தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.