

மழையின் காரணமாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. திங்களன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. மழை காரணாக சேலம் ஸ்பார்ட்டன் அணி போட்டியை தொடர முடியவில்லை. முதல் போட்டியில் அறிமுக வீரரான சுதர்சன் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 வயது இளம் வீரரான சுதர்சன் 43 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தார்.
