மதுக்குடிக்க பணம் தராததால் மனைவி குழந்தைகளை வீட்டோடு கொழுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடானது என்று வாய்கிழிய சொன்னால் போதுமா? எப்போது தான் மதுவிலக்கு அமுலாக்குவார்கள் என்ற கேள்வி உள்ளது. ஒரு தேசத்தின் உண்மையான குடிமகன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு குடிமகன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாணரம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வரும் குமார் குடிக்க பணம் தராத காரணத்தால் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டோடு கொழுத்தியுள்ளார். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு என அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு சிகிச்சைகள் இல்லை.
கவுன்சிலிங் செய்ய மருத்துவர்கள் இல்லை. குடிக்கு அடிமையானவர்களை எப்படித்தான் மீட்பது. ஒரு அரசுக்கு இதெல்லாம் கடமை இல்லையா? சாராயம் விற்;பது மட்டுமே கடமையா? என்ற பல கேள்விகள் நம் முன்னே தோன்றுகிறது.
ஆனால் அரசுக்கு தோன்றுமா? என்று தெரியவில்லை. செங்கல் சூளை சென்று கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் குடும்பம் நடத்த போதுமா? அதில் குடிக்க பணம் கொடுத்தால் எப்படி? குடிசை எரிந்த நிலையில் நிர்கதியான குமாரின் மனைவி பழனியம்மாள்தொளசம்படடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தீவைத்த கணவர் குமாரை கைது செய்துள்ளனர். ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் மீட்பராக அரசு வருமா? என்பதே நம் கேள்வி.