நாகர்கோவில் அடுத்த தோவாளை அன்னை ஆசிரமம் மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள மனநலம் பாதித்த மனநோயாளிகளுக்கு, கருணை உள்ளம் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த முதுகலை பட்டதாரியான இளம்பெண் இலவச யோகா பயிற்சி அளித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள அன்னை ஆசிரமம் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது இங்கு 50க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் உள்ளனர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் நாகர்கோவில் புத்தேரியைச் சேர்ந்த நவீனா என்ற முதுகலை பட்டதாரியான யோகா ஆசிரியர் ஆசிரமத்துக்கு நேரடியாக சென்று மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக மூன்று மணி நேரமாக யோகா பயிற்சி அளித்துள்ளார். இதில் கிரியாயோகா, பிராணயாமா யோகா போன்ற பயிற்சியானது உடலில் உள்ள செல்களை புதுப்பித்து மனதை பலப்படுத்தி மூளையை உற்சாகத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் நல்ல நிலைமைக்கு மாறும் அறிவியல் சார்ந்த யோகாவை சொல்லிக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது போன்று தினசரி யோகா பயிற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் நல்ல நிலைக்கு மாற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் பட்டதாரி இளம் பெண்ணான நவீனா. யோகா என்பது பணக்காரர்களின் உடற்பயிற்சி, இது இந்து மதம் சார்ந்த வகுப்பு என்று நினைப்பது தவறு. இந்தியக் கலாச்சாரத்தின் அங்கமாக இருக்கின்ற யோகா பயிற்சியை பல்வேறு தரப்பினருக்கு இலவசமாக கற்றுக்கொடுப்பது தான் தனது ஆசை என்றும் தெரிவித்து உள்ளார்.