• Thu. Apr 25th, 2024

பிரசவித்த பெண்ணின் கைநரம்பில் சிக்கி உடைந்த ஊசி.., வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்..!

By

Aug 8, 2021

பிரசவமான பெண்ணின் கை நரம்பில் சிக்கி உடைந்த ஊசி. அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
ஊட்டி ராஜ்பவன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் பகதூர்-சஞ்சனா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இரண்டாவது கர்ப்பம் தரித்த சஞ்சனா பிரசவத்திற்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி ஊட்டி அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். நேற்று அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் குடும்ப கட்டுபாடு சிசிச்சை செய்யபட்ட பின்னர் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனை கழட்ட முயன்றபோது ஊசி உடைந்து கை நரம்பில் சிக்கி கொண்ட நிலையில் இது குறித்து ஊழியர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதனை பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது எனவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.


சஞ்சனாவின் உறவினர்கள் விரைவில் அனுப்பி வைக்க கேட்ட நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காத காரணத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்த போலீசார் சஞ்சனாவை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவைக்கு அழைத்து வரப்பட்ட சஞ்சானவிற்கு மருத்துவர் தீபன் தலைமையிலான அணியினர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு நரம்பில் சிக்கிய ஊசியை அகற்றினர்.


கை நரம்பில் ஊசி சிக்கி வலியால் துடித்தபடி சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யபட்டு ஊசி அகற்றபட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *