• Wed. Mar 19th, 2025

மதுரையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

Byadmin

Jul 28, 2021

மதுரையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இதே போன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 16 ஆவது வட்ட கழக நிர்வாகிகள் சார்பில் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லாலா ராஜேந்திரன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அனுப்பானடி பகுதியில் அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் பாலகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆண்களும் திமுக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மக்களுக்கு தேவையானதை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அரசுக்கு வலியுறுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் தேர்தல் வாக்குறுதியை மறந்து இருந்தாலும் தமிழக மக்கள் அளித்துள்ள பதவி மோகத்தில் மறந்திருந்தாலும் அவருக்கு நினைவூட்டும் வகையில் எதிர்க்கட்சி கடமையாற்றும் வகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தேர்தல் அறிக்கையில் இனிக்க இனிக்க கூறிவிட்டு தற்போது மக்களுக்கு கசப்பு மருந்து தந்து வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் ஆனால் இன்று மாணவர்களை ஏமாற்றி வருகிறார், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, எரிவாயு கேஸ் விலை 100 ரூபாய் மானியம் என்று அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர், என பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.