• Wed. Apr 24th, 2024

மதுரையில் அதிகபட்ச மின்கட்டணம் – புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.!!

Byadmin

Aug 2, 2021

மதுரையில் அதிகபட்ச மின்கட்டணமாக ரூ.850 செலுத்திய வாடகை வீட்டுகாரருக்கு ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.11,352 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்ததால் அதிர்ச்சி – புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.!!

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் என்பவர் அந்த தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.வாடகை வீட்டிற்கு கடந்த ஆண்டில் 2 மாதத்திற்கொருமுறை ரூ.400 முதல் அதிகபட்சமாக 850-ரூபாய்க்குள் மின் கட்டணம் செலுத்தியுள்ளார்.
இவருக்கு தற்போது ஜூலை மாதத்திற்குரிய கட்டணமாக ரூ.11 ஆயிரத்தி 352 கட்டணத்தோடு ரூ.390 டெபாசிட் செலுத்துமாறு கட்டண அறிவிப்பு வந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த மே மாதத்திற்கு மின் கட்டணம் ரூ.260 பணம் செலுத்திய நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கு ரூ.11,352 கட்டணத்தோடு, டெபாசிட் தொகை ரூ.390 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது.இதுகுறித்துத் தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் சரியான பதில் தர மறுக்கின்றனர். மீட்டரில் உள்ளவாறு பணத்தைக் கட்டச் சொல்கின்றனர். இதுவரை அதிகபட்சமாக ரூ.850க்கும் மேல் கட்டியதில்லை. திடீரென ரூ.11,352 கட்டணம் என்பதால் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் முதல்வர் தனிப்பிரிவு வரை ஆன்லைனில் புகார் தெரிவித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இதுகுறித்துத் தெப்பக்குளம் மின்நிலைய உதவிப் பொறியாளர் தரப்பில் அளித்த தகவலில் மின் கணக்கீட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்திருக்கலாம் எனவும் எங்கே தவறு நடந்தது எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டரில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துதரப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *