


திண்டுக்கல் மாவட்டம் கூவக்காபட்டியைச் சேர்ந்த பெண் பத்மாவதி இவரது கணவர் முருகன் இவர்கள் காலங்காலமாக நடந்து வந்த அரசு பொது பாதையை மனோகரன் என்பவர் மகன் தங்க முருகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நடக்கவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. தங்களது வீட்டுக்கு செல்ல இந்த பாதையை தவிர வேறு பாதை இல்லை எனவே எங்களுக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டுமென பத்மாவதி கடந்த டிசம்பர் மாதம் வேடசந்தூர் வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் ஆனால் வட்டாட்சியர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் பத்மாவதி முருகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

