

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மோட்டர் சைக்கள், கேஷ் சிலிண்டருக்கு மாலையணிவித்து பாடை கட்டி நூதன போராட்டம். மைக்செட்டுக்கு அனுமதியில்லாத நிலையில் பாதியில் நிறுத்தி காவல்துறையினருடன் வாக்குவாதம். அனுமதியின்றி நடத்தப்பட்டதால் வழக்குபதிவு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நிலக்கோட்டை நகர் பகுதியில் தூதனமாக கண்டன ஆர்ப்பாட்டம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் மைக் செட் ஒலி பெருக்கியை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆனால் இதற்கு அனுமதி இல்லாத நிலையில் நிலக்கோட்டை போலீசார் ஆர்ப்பாட்டத்தை பாதியில் தடுத்து நிறுத்தி ஒலிபெருக்கி பயன்படுத்த தடைவிதித்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்த போதிலும் நாம் தமிழர் கட்சியினர் பிடிவாதமாக கண்டன ஆர்பாட்டத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்தப்பட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெட்ரோல் ,டீசல், கேஷ் சிலின்டர் விலை உயர்வுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊரடங்கு அமலில் உள்ள போது ஒலிபெருக்கியுடன் கண்டன ஆர்பாட்டம் தடையை மீறி நடத்தப்பட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.