

பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்கனவே கொரோனா பேரிடர் காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில் மத்திய அரசு தொடர்ச்சியாக பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது ,ஜிஎஸ்டி வரியை கட்டுக்குள் கொண்டு வரவில்லை, மக்களின் வருமானம் முழுவதையும் எரிபொருள்களுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மனித பாதுகாப்பு கழகம் தொடர்ந்து மத்திய அரசின் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் என அந்த அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜெயமோகன் கூறினார்.இதில் பொதுச்செயலாளர்.
வழக்கறிஞர் உஷா,
