பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பை எதிர்த்தும், குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வழிகாட்டுதலின்படி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் இன்று இந்திய அளவில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரசின் அனைத்து பிரிவுகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று மாலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
இதில் இந்திய அரசால் பெகாசஸ் உளவு ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு ஆகியவற்றை எதிர்த்தும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் குமரிமாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதாரணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.