

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலமாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றன மத்திய பாஜக அரசை கண்டித்தும்,நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் வழங்காவிட்டால் பிரதமர் மோடிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலை ,வளையல் அனுப்பும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்து நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மத்திய பாஜக அரசு பதவியேற்று 7 ஆண்டுகளில் வரலாறு காணாத பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருகிறது,மேலும் கடந்த வாரத்தில் சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூ 25 உயர்த்தியதற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது,அதே போல் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று குமரி மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் இராதகிருஷ்ண் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர்.இராதகிருஷ்ண் கூறுகையில்” பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலமாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றன மத்திய பாஜக அரசை கண்டிக்கிறதாகவும்,
நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் வழங்காவிட்டால் பிரதமர் மோடிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலை ,வளையல் அனுப்பும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
