• Fri. Mar 29th, 2024

பெகாசஸ் விவகாரம்- விசாரிக்க குழு அமைக்க முடிவு!…

By

Aug 16, 2021

பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


தற்போது 2 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பெகாசஸ் விவகாரத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது அலைபேசிகளும் பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரது அலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டது மத்திய அரசுக்கு தெரிந்து தான் நடந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்கள் என்.ராம், எடிட்டர்ஸ் பில்ட் என்ற அமைப்பு, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சார்பாக பொதுநல மனுக்கள், ரிட் மனுக்கள் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்தவாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் 2 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த பெகாசஸ் சர்ச்சையில் எழுப்பப்பட்ட அத்தனை பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் கொண்ட குழுவானது அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆதாரமற்ற உறுதிப்படுத்தப்படாத முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாத அறிக்கைகள், ஊடங்கங்களில் வெளியான செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாங்கள் மறுப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இத்தகைய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை காரணம்காட்டி தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மழைக்கால கூட்டத்தொடர் கிட்டத்தட்ட தோல்வியில் தான் முடிந்தது. விவாதங்கள் ஏதும் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அமைதியான முறையில் மாநிலங்களவையும், மக்களவையும் நடக்கவில்லை. இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்பதை முன்னதாகவே அரசு சார்பாக நீதிமன்றத்தில் சொல்லி இருந்தால் ஒருவேளை அமளி இல்லாமல் இருந்திருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசு ஒரு நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்பதை அறிவித்துள்ளது. தங்களுக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கவும் செய்துள்ளது.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
மணிப்பூர் வழக்கு அசாம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *