ஜூலை. 29– தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவர் ஆவதற்கு தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ். சமீரன் கூறுகையில் கோவை மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக இம் மண்டலத்தில் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்வது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையத்தில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அவர்கள் மேலும் பல விபரங்களை உங்களுக்கு தருவார்கள் என அவர் தெரிவித்தார்.