• Wed. Mar 19th, 2025

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!…

By

Aug 14, 2021

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மைய பகுதியில் பழம்பெருமை வாய்ந்த புகழ் பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிள்ளை வரம் கேட்டு வருபவர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் உள்ளது. அதுவும் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை என்பதால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு சாற்றி, பல வண்ண மலர் மாலைகள் மற்றும் வளையல், எலுமிச்சை பழ மாலை அணிவித்து சர்வ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் மாவிளக்கு, நெய் விளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.