

சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் வெளிவரும் மாலை நியூஸ்&நல்லாட்சி பத்திரிகையின் நிறுவனரும் மற்றும் அதன் ஆசிரியருமான கதிர்வேல் சமூக சிந்தனை, அரசியல், ஆன்மிக கருத்துகளை பத்திரிகை மூலமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அவருடைய பணியை ஊக்குவிக்கும் விதமாக அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் “சமூக சிந்தனையாளர்” விருது வழங்கி பாராட்டியுள்ளது.
இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி, மாநில செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கதிர்வேல் ஜிக்கு சமூக சிந்தனையாளர் விருதை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட கதிர்வேல், 9 ஆண்டுகளாக மாலை நியூஸ் & நல்லாட்சி இதழ்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
