


கீழடியில் 7ம் கட்ட அகழாய்வின் போது ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தொல்லியல் துறை சார்பில் கீழடி ,அகரம் கூந்தகை மற்றும் மணலூர் பகுதிகளில் 7ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஊரை கிணறுகள், சிகப்பு நிற பானைகள், மூடியுடன் கூடிய பானைகள், கல் உளவு கருவி, சுடு மண்ணால் ஆன பகடை, முது மக்கள் தாலிகள், புகைபிடிப்பான் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கீழடி மற்றும் அகரத்தில் மேற்கொண்ட ஆய்வில் பழங்கால ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாசி ,பவளம் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன, வட்டவடிவ காதணிகளில் புள்ளிகளுடன் கூடிய வேலைபாடுகள் காணப்படுவதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

