• Wed. Dec 11th, 2024

பாடநூல் ஆலோசர்கள் லியோனி சுப.வீரபாண்டினுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு…

Byadmin

Jul 28, 2021

பாடநூல் ஆலோசர்களாக லியோனி சுப.வீரபாண்டியன் ஆகியோர் தேர்வுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கட்சியின் மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் ஆட்சேபனை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
பெண்களின் இடுப்பை வர்ணித்து காமெடி கலந்த ஆபாசத்தை பற்றி பேசும் பட்டி மன்ற பேச்சாளர் லியோனி மற்றும் இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசும் சுப.வீரபாண்டியன் கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்யும் ஒரு பாதிரியார் போன்றவர்களை தமிழ்நாடு பாடத்திட்டக்குழு பொறுப்பாளர்களாக தற்போது நியமனம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்கள் குழந்தைகள் கல்வியையும். அறிவையும் வளர்க்கக் கூடியவர்களாக தமிழக நாகரீக கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் மற்றும் தேசபக்தி தெய்வபக்தி கற்றுக்கொள்பவர்களாகத்தான் கல்வி கற்க பள்ளி கல்லூரிக்கு அனுப்புகிறோம். ஆனால் தாங்களோ இந்து மதத்திற்கு எதிரானவர்களையும் மதப்பிரச்சாரம் செய்பவர்களையும். ஆபாச பேச்சாளர்களையும் கல்விக்கு சம்மந்தமில்லாத மேற்கண்ட நபர்களை தமிழ்நாடு பாடநூல் திட்டத்திற்கு பொறுப்பாளர்களாக நியமித்தால் எங்கள் குழந்தைகளின் கல்வியும் வாழ்கையும் சீரழிந்து வீணாகிவிடும். லியோனி சுப.வீரபாண்டியன் என்.டி. பாதிரியார் ஆகியோர் உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உங்களுக்கு ஆதரவாளர்கள் உங்களது கட்சிக்கு கடமைப்பட்டவர்கள் என்றால் உங்களது கட்சியிலோ அல்லது முரசொலியிலோ நாளிதழிலோ கலைஞர் டி.வியிலோ பொறுப்பைக் கொடுத்து அழகுபடுத்திக்கொள்ளுங்கள். எங்கள் குழந்தைகளின் கல்வியிலும் வாழ்கையிலும் விளையாடாதீர்கள்.மேற்கண்ட நபர்களை நீக்கிவிட்டு ஜாதி மத இன மொழி அரசியலுக்கு அப்பாற்றப்பட்டவர்களை படித்த மேதாவிகளை விஞ்ஞானிகளை நியமிக்க வேண்டும் என தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சோலைக்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்