பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாரதியார் மக்கள் நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்திய பழங்குடியினர் மலைவாழ் மக்களுக்கான குறை தீர் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்மாளபட்டி குட்டையில் புதனன்று நடைபெற்றது.
தும்பல்பட்டி கம்மாளபட்டி குரால்நத்தம பகுதியில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியல் சேலம் மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சார்பாக டி.எஸ்.ஓ. பிரகாசம் கருத்துரை வழங்கினார். அதிகாரிகள் வள்ளிதேவிää கணேசன் திமுக ஒன்றிய துணைச்செயலாளர் எம்.ராஜா பாரதியார் நல்வாழ்வு சங்க செயலாளர் டி.நீலா சேலம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்;காணிப்புக்குழு உறுப்பினரும் பழங்குயின உறுப்பினருமான சி.ஆர். தேவிகா ஆகியோர் கலந்து கொண்டனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். இவ்விழாவில் தும்பல்பட்டி ஊராட்சித்தலைவர் மணிகண்டன் குரால் நத்தம் ஊராட்சி முன்னாள் தலைவர் காந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பாரதி மக்கள் நல்வாழ்வு சங்க திட்ட அலுவலர் ஏ.டி.பிரயேஸ் நன்றி தெரிவித்தார். சிலம்பொலி செல்லப்பனார் காப்பு மன்றத்தின் உடைய தலைவர் மோகன் குமார் கபசுர குடிநீர் வழங்கினார்.