• Tue. Dec 10th, 2024

பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆலோசனை!…

By

Aug 16, 2021

பள்ளிகள் திறக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய கொரானா வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளோடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் படி கடந்த முறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தயாராகி வரும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளிகல்வி துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்னும் சில நாட்களில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.