தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை சென்னையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பணியில் இருந்த பிரமாண அர்ச்சகர்களை நீக்கிவிட்டு, புதிதாக வந்தவர்களை பணிக்கு அமர்த்தியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து திருச்சி மலைக்கோயிலை உள்ளிட்ட கோயில்களைச் சேர்ந்த அர்ச்சகர்களை வெளியேற்றிவிட்டதாக குருக்கள் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்து இன்றை சட்டமன்ற கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக கோயில்களில் ஏற்கனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கலைஞர் கொண்டு வந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது, அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.