பக்ரீத் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
முஸ்லிம்களின் தியாகத் திருநாள் என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திட்டுவிளை கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலையில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை பகுதியில் உள்ள பாவா காசியும் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று தொழுகையில் ஈடுபட்டனர் பின்னர் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.