• Thu. Apr 25th, 2024

நீறுபூத்த நெருப்பாக ஸ்டான்சாமியின் அஸ்தி….ஸ்டேன்சாமி அஸ்தி நாகர்கோவில் வந்தது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் அது பற்றிய விவரம் வருமாறு……

Byadmin

Jul 23, 2021

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன்சுவாமி ஜார்க்கண்ட் உத்தர்காண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பழங்குடி மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடினார் இதற்காக அவரை மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு உபா சட்டத்தில் கைது செய்தது 83 வயதான ஸ்டான்ஸ்வாமி பாதிரியார் சிறையில் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி மரணம் அடைந்தார் அவரது மறைவுக்கு காரணமான பாஜக ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன கிறிஸ்துவ மதத்தில் கர்த்தருக்குள் தொடங்குவதற்காக உடல்களை புதைப்பது வழக்கம் ஆனால் ஸ்டான்சாமி ஒரு போராளி என்பதற்காக அவரது உடல் எரியூட்டப்பட்டு அஸ்தி கலசங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது அதில் ஒரு பகுதி தமிழகத்திலும் அஞ்சலிக்காக கொண்டுவரப்படுகிறது முதற்கட்டமாக நாகர்கோவிலில் கொண்டுவரப்பட்டது ராமன்புதூர் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் பாதிரியார்கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை இரங்கல் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, தலைமையில் முன் மதத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *