• Fri. Apr 18th, 2025

த.வெ.க.சார்பில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை குடம்…,

ByAnandakumar

Apr 14, 2025

கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது.

கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அம்பேத்கர் வாழ்க, அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷம் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து ஏழைப் பெண்கள் 100 பேருக்கு இலவச சேலை மற்றும் பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.