


கரூர், அண்ணா நகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1500 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான காய்கறி, பழங்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து சித்திரை 1 விசுவாசுவ வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை ஒட்டி கரூர் மாநகராட்சி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது

அதனை தொடர்ந்து 1500 கிலோ அளவில் காய்கறி பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு அலங்காரத்திற்காக கத்தரி வெண்டை முருங்கை பீன்ஸ் அவரை பாகற்காய் பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளும் ஆரஞ்சு ஆப்பிள் அன்னாசி சாத்துக்குடி திராட்சை உள்ளிட்ட பல வகைகளாலும் கற்பக விநாயகர் நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
முரளி சிவாச்சாரியார் ஆலய தலைமை சிவாச்சாரியார் தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில் கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

