• Fri. Apr 18th, 2025

தேனியில் ரத்ததான முகாம்… இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!..

By

Aug 16, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது . இந்த ரத்ததான முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகாமு,ஆசிரியை நிறைமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன் ரத்தம் வழங்கி துவக்கிவைத்தார். அப்போது அவர் நேயமும் ,மனித பண்பாடு வளர வேண்டுமென்றால் அனைவரும் ஆர்வமுடன் வந்து ரத்த தானம் வழங்க வேண்டும் என்று பேசினார்.தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படும் இந்த ரத்ததான முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, அரசு மருத்துவர்கள் மணிமொழி, மகேஸ்வரன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்த தானம் வழங்கினார்கள்.